புதுச்சேரி

குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ள பட காட்சி.

குடிநீர் குழாயில் உடைப்பு

Published On 2022-08-05 09:20 GMT   |   Update On 2022-08-05 09:20 GMT
  • சென்னை நாகப் பட்டினம் 4 வழி சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது.
  • கண்டமங்கலம் பழைய போலீஸ் நிலையம் எதிரேசாலையை கடந்து செல்லும் குடிநீர் குழாய் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது.

புதுச்சேரி:

சென்னை நாகப் பட்டினம் 4 வழி சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கண்டமங்கலம் பழைய போலீஸ் நிலையம் எதிரேசாலையை கடந்து செல்லும் குடிநீர் குழாய் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது.

ஒருபுறம் சாலை பணி நடைபெற்று வருகிறது. மற்றொருபுறம் ஒரு வழி பாதையாக சிறிய வழித்தடமாக அமைக்கப்பட்டு அந்த வழியாக வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த வழியாக அதிகமாக வாகனங்கள் சென்று வருவதால் குடிநீர் குழாய் சுமார் 2 அடி ஆழத்தில் செல்வதால் அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது.

நேற்று 4-வது முறையாக உடைப்பு ஏற்பட்ட பகுதியை சாலை போடும் ஒப்பந்ததாரர்கள் மூலம் சரி செய்யப்பட்டது. மீண்டும் அதே பகுதியில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சாலையில் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால் வாகனங்கள் சேறு மற்றும் சகதியில் சிக்கிக் கொண்டு விபத்தும் ஏற்படுகிறது.

மீண்டும் உடைப்பு ஏற்படாத வண்ணம் நிரந்தர தீர்வாக உடைப்பை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News