புதுச்சேரி

மோடி அரசியல் பயணம் குறித்த புத்தகம் வெளியீட்டு விழாவின் போது எடுத்த படம்

மோடி அரசியல் பயணம் குறித்த புத்தகம் வெளியீடு

Published On 2022-08-28 13:58 IST   |   Update On 2022-08-28 13:58:00 IST
  • புதுவை பா.ஜனதா சார்பில் பிரதமர் மோடியின் 20 ஆண்டுகால அரசியல் பயணம் குறித்து புத்தக வெளியீடு புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
  • நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை புதுவை மாநில மோடி 20 புத்தகம் மக்களுக்கு சென்றடைவதற்கான பொறுப்பாளர் முன்னாள் நீதிபதி அருள் மற்றும் உழவர்கரை மாவட்ட தலைவர் நாகேஸ்வரன் ஆகியோர் செய்திருந்தனர்.

புதுச்சேரி:

புதுவை பா.ஜனதா சார்பில் பிரதமர் மோடியின் 20 ஆண்டுகால அரசியல் பயணம் குறித்து புத்தக வெளியீடு புதுவை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

மாநிலத் தலைவர் சாமிநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ் நாடு மாநில பா.ஜனதா பொதுச்செயலாளர் ஸ்ரீராம் சீனிவாசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு முதல் புத்தகத்தை வெளியிட்டு மாநில தலைவர் சாமிநாதன் வழங்கினார்.

நிகழ்ச்சியில் செல்வ–கணபதி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஜான் குமார், சிவசங்கரன் ,அசோக் பாபு, பா.ஜனதா மாநில பொதுச் செயலாளர் மோகன் குமார் மாநில துணைத்தலைவர்கள் அருள்முருகன் ரவிச்சந்திரன் செல்வம் ஓ. பி. சி. அணி தேசிய செயற்குழு உறுப்பினர் காசிலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை புதுவை மாநில மோடி 20 புத்தகம் மக்களுக்கு சென்றடைவதற்கான பொறுப்பாளர் முன்னாள் நீதிபதி அருள் மற்றும் உழவர்கரை மாவட்ட தலைவர் நாகேஸ்வரன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News