புதுச்சேரி

ரத்ததான முகாமை எதிர்கட்சி தலைவர் சிவா தொடங்கி வைத்த காட்சி.

தொண்டு அறக்கட்டளை சார்பில் ரத்ததானமுகாம்

Published On 2022-09-04 13:46 IST   |   Update On 2022-09-04 13:46:00 IST
  • 2-ம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தும் வகையில் ரத்ததான முகாம் இன்று வில்லியனூர் அன்னை கண் மருத்துவமனையில் நடைபெற்றது.
  • முகாமை டாக்டர் சுகந்தி பிரபாaகரன் முன்னிலையில் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

புதுச்சேரி:

டாக்டர் எம்.ஏ.எஸ்.சுப்ரமணியன் தொண்டு அறக்கட்டளை சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ., டாக்டர் எம்.ஏ.எஸ். சுப்ரமணியன் 2-ம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தும் வகையில் ரத்ததான முகாம் இன்று வில்லியனூர் அன்னை கண் மருத்துவமனையில் நடைபெற்றது.

முகாமை டாக்டர் சுகந்தி பிரபாaகரன் முன்னிலையில் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

இதில் என்ஜினீயர் பிரபாகரன், தி.மு.க நிர்வாகிகள் மாநில விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் செல்வநாதன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் கதிரவன், சண்முகம், பால்பாண்டியன், ரமணன், ரபீக், சுப்பிரமணியன், மிலிட்டரி முருகன், மனோகர், மோகன், முருகேசன், ரகு ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News