புதுச்சேரி

பாவேந்தர் கலை இலக்கியத் திங்கள் விழா பாவேந்தர் பாரதிதாசன் அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்ற காட்சி.

பாவேந்தர் கலை இலக்கியத் திங்கள் விழா

Published On 2023-10-02 10:17 IST   |   Update On 2023-10-02 10:17:00 IST
  • கலை பண்பாட்டுத் துறை இயக்குநர் கலியபெருமாள் கலந்து கொண்டு வாழ்த்துரை ஆற்றினார்.
  • விழாவில் கவிஞர்கள் சரஸ்வதி வைத்தியநாதன், விசாலாட்சி, மதன், ராஜேஷ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி:

பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் மாதந்தோறும் பாவேந்தர் கலை இலக்கியத் திங்கள் விழா பாவேந்தர் பாரதிதாசன் அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்று வருகிறது.

அதுபோல் இந்த மாத விழா புரட்சிக்கவிஞரும் காந்தியடிகளும் என்ற தலைப்பில் நடந்தது.

விழாவிற்கு அறக்கட்டளைத் தலைவர் கோ.பாரதி தலைமை தாங்கினார்.

விழாவில் கலை பண்பாட்டுத் துறை இயக்குநர் கலியபெருமாள் கலந்து கொண்டு வாழ்த்துரை ஆற்றினார்.

மேலும் கோ.கலியபெருமாள் வாழ்த்துப்பா வாசித்தார்.செயலர் வள்ளி, இசைச்சுடர் கிருஷ்ணகுமார், தொழிலதிபர் அருள்செல்வம், மீனாட்சிதேவிகணேஷ், இராஜி, சுதா, இலட்சுமிதேவி, தமிழரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாணவர் திருக்குறள் அரங்கத்தில் பங்கேற்றுப் பத்து திருக்குறள் ஒப்பித்த 24 மாணவர்களுக்குப் பாராட்டிதழ் வழங்கப்பட்டது.

முன்னதாகக் கவிஞர் ராஜஸ்ரீமகேஷ் வரவேற்றார்.முடிவில் பிரமீளாமேரி நன்றி கூறினார்.விழாவில் கவிஞர்கள் சரஸ்வதி வைத்தியநாதன், விசாலாட்சி, மதன், ராஜேஷ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News