புதுச்சேரி

கோப்பு படம்.

அதிகாரி இல்லாத பாகூர் தீயணைப்பு நிலையம்

Published On 2023-11-10 14:20 IST   |   Update On 2023-11-10 14:20:00 IST
  • தீபாவளி நேரத்தில் மக்கள் அச்சம்
  • பாகூர் தீயணைப்பு நிலையத்தில் நிலைய அதிகாரி இல்லாமல் கடந்த 6 மாதமாக செயல்பட்டு வருகிறது.

புதுச்சேரி:

புதுச்சேரியில் 8 தீயணைப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது.

இதில் முக்கிய பகுதிகளில் ஒன்றான பாகூரிலும் தீயணைப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது.

இந்த தீயணைப்பு நிலையத்திற்கு உட்பட்ட பகுதியான பாகூர், அரங்கனூர், கிருமாம்பாக்கம், கன்னியாகோவில், மணப்பட்டு, மூர்த்திக்குப்பம், கரையாம்புத்தூர், உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் தீ விபத்து ஏற்பட்டால் பாகூர் தீயணைப்பு நிலையத்திலிருந்து தான் தீயணைத்து வருகின்றனர்.

பாகூரை சுற்றி உள்ள பகுதிகளில் குடிசை வீடுகள், பள்ளிக்கூடங்கள், அரசு அலுவலகங்கள், தென்பெண்ணை ஆறு, ஏரி, குளங்கள் என அமைந்துள்ளது. அவ்வப்போது ஏற்படும் தீ விபத்துகள், ஆற்றில் சிக்கும் இளைஞர்கள் மீட்பு மற்றும் தீயணைப்பு பணியை மேற்கொள்ளப்பட்டு தீயணைப்பு துறையினரே மேற்கொண்டு வருகின்றனர்.

ஆனால் பாகூர் தீயணைப்பு நிலையத்தில் நிலைய அதிகாரி இல்லாமல் கடந்த 6 மாதமாக செயல்பட்டு வருகிறது. இங்குள்ள தீயணைப்பு நிலைய அதிகாரியாக இருந்த பக்கிரி கடந்த மே மாதம் ஓய்வு பெற்றார். அவர் ஓய்வு பெற்று 6 மாதங்கள் ஆகியும் இதுவரை நிலைய அதிகாரி பணியிடம் காலியாக உள்ளது.

தற்போது தீபாவளி பண்டிகை வருகிற ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

இந்தப் பண்டிகையை சிறியவர்கள் முதல் பெரிய வர்கள் வரை புத்தாடை அணிந்து பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியாக கொண்டாட உள்ளனர்.

பாகூர் பகுதியில் இந்த தீபாவளி பண்டிகை நாளில் அசம்பாவிதம் ஏதேனும் பெரிய அளவில் நடக்கும் முன் நிலைய அதிகாரியை உடனடியாக நியமிக்க வேண்டும் என கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News