புதுச்சேரி

கோப்பு படம்.

ஆயுர்வேத டாக்டர்களின் சம்பள முரண்பாடை களைய வேண்டும்-நேரு எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

Published On 2023-03-30 08:31 GMT   |   Update On 2023-03-30 08:31 GMT
  • புதுவை மாநிலத்தில் சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கபட்டு வருகிறது.
  • சுமார் 400-க்கும் மேற்பட்ட ஆயுர்வேத டாக்டர்கள் தங்கள் படிப்பை முடித்து வெளிவந்துள்ளனர்.

புதுச்சேரி:

புதுவை சட்டசபையில் பூஜ்ய நேரத்தில் சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு பேசியதாவது:-

புதுவை மாநிலத்தில் சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்திற்கு முக்கியத்துவம் அளிக்கபட்டு வருகிறது. இருந்தாலும் ஆங்கில டாக்டர்களுக்கு ஒரு விதமாகவும், ஆயுர்வேதா டாக்டர்களுக்கு வேறு விதமாகவும் சம்பள முரண்பாடு உள்ளது. அதை முறைப்படுத்த வேண்டும்.

இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரி தொடங்கப்பட்ட அதே காலகட்டத்தில் மாகி பகுதியில் ஆயுர்வேத கல்லூரி 2010-ல் தொடங்கப்பட்டது. சுமார் 400-க்கும் மேற்பட்ட ஆயுர்வேத டாக்டர்கள் தங்கள் படிப்பை முடித்து வெளிவந்துள்ளனர்.

மாகி பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று பேசிய முதல்-அமைச்சர், வில்லியனூர் பகுதியில் ஆயுர்வேத மருத்துவமனை தொடங்கப்படும் என்றும், அதில் மாகியில் படித்த ஆயுர்வேத மருத்துவர்களுக்கு பணி வழங்கப்படும் என்றும் கூறியிருந்தார்.

இதன்படி அவர்களுக்கு பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News