புதுச்சேரி

கடலூர் சென்ட்ரல் ரோட்டரி சங்கம் சார்பில் தி சுசான்லி குழும சேர்மன் டாக்டர் ரவி இணைச்சேர்மன்களான டாக்டர்கள் உஷா ரவி, பானுப்பிரியா ஆகியோரின் சேவையை பாராட்டி விருது வழங்கப்பட்ட காட்சி.

தி சுசான்லி மருத்துவ குழுமத்திற்கு விருது

Published On 2023-08-22 11:21 IST   |   Update On 2023-08-22 11:21:00 IST
  • கடலூர்சென்ட்ரல் ரோட்டரி சங்கம் பல்வேறு சேவை பணி செய்து வருபவர்களை பாராட்டி விருது வழங்கியது.
  • டாக்டர் பானுபிரியா ஆகியோரை பாராட்டி கடலூர் ரோட்டரி சங்கம் விருது வழங்கியது.

புதுச்சேரி:

கடலூர்சென்ட்ரல் ரோட்டரி சங்கம் பல்வேறு சேவை பணி செய்து வருபவர்களை பாராட்டி விருது வழங்கியது. கடந்த 31 ஆண்டுகளாக தன்னலமற்ற மருத்துவ சேவை, இலவச மருத்துவ முகாம், இலவச மூலிகை தொழிற்பயிற்சி, சிறு-குறு தானியங்கள் குறித்த ஆய்வுகள், உயர் நிலை, மேனிலை பள்ளியில் சிறந்த மதிப்பெண் பெறும் மாணவர்களை ஊக்குவித்தல் போன்ற பல்வேறு சேவைகளை செய்து வரும் தி சுசான்லி குழுமத்தின் சேர்மன் டாக் டர் ரவி, இணை சேர்மன் கள் டாக்டர் உஷாரவி, டாக்டர் பானுபிரியா ஆகியோரை பாராட்டி கடலூர் ரோட்டரி சங்கம் விருது வழங்கியது.

இதில் டாக்டர் ரவிக்கு பாரம்பரிய மருத்துவ மேதை, பேராசிரியை டாக்டர் உஷாரவிக்கு பாரம்பரிய மருத்துவ சிகரம், டாக்டர் பானு பிரியாவுக்கு பாரம்பரிய மருத்துவதிலகம் என்ற விருதை வழங்கி கவுரவப் படுத்தியது. இதில் சிறப்பு விருந்தினராக திரைப்பட பாடலாசிரியரும், தமிழ் ஆய்வாளருமான அறிவு மதி கலந்துகொண்டார்.

சென்ட்ரல் ரோட்டரி சங்க தலைவர் சுந்தரமூர்த்தி, செயலாளர் ராஜவேல், பொருளாளர் ஏழுமலை, ஆலோசகர் வக்கீல் அருணாசலம், உதவி ஆளுநர் சுரேஷ்பாபு மற்றும் சங்க உறுப்பினர்கள், பொறுப்பாளர்கள், கட லூர் மாவட்டத்தின் பிற சங்கங்களை சேர்ந்தவர் கள் கலந்துகொண்டனர். பொருளாளர் நன்றி கூறி னார்.

Tags:    

Similar News