புதுச்சேரி
யோகாஞ்சலி நாட்டியாலய பொது மேலாளருக்கு விருது வழங்கிய காட்சி.
யோகாஞ்சலி நாட்டியாலய பொது மேலாளருக்கு விருது
- தட்டாஞ்சாவடி கம்பளி சுவாமி மடத்தில் மீனாட்சி தேவி பவனானி பிறந்த நாள் விழா நடந்தது.
- யோகாஞ்சலி சங்க நிர்வாகிகள், யோகா மாணவர்கள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி சித்தர் பூமி யோகாசன விளையாட்டு சங்கம் சார்பில் தட்டாஞ்சாவடி கம்பளி சுவாமி மடத்தில் மீனாட்சி தேவி பவனானி பிறந்த நாள் விழா நடந்தது.
இதில், யோகாஞ்சலி நாட்டியாலயா பொது மேலாளர் சண்முகத்திற்கு, மேஜர் தியான்சந் சிறந்த மூத்த அதிகாரி என்ற விருதை, மீனாட்சி தேவி பவனானி மற்றும் சங்க தலைவர் ஆனந்த பாலயோகி பவனானி இணைந்து வழங்கினர்.
நிகழ்ச்சியில் யோகாஞ்சலி சங்க நிர்வாகிகள், யோகா மாணவர்கள் கலந்து கொண்டனர்.