புதுச்சேரி

ஹோமியோபதி மருத்துவனையில் அசோக்பாபு எம்.எல்.ஏ. ஆய்வு செய்த காட்சி.

null

ஹோமியோபதி மருத்துவனையில் அசோக்பாபு எம்.எல்.ஏ. திடீர் ஆய்வு

Published On 2023-09-12 15:01 IST   |   Update On 2023-09-12 15:02:00 IST
  • நோயாளிகளிடம் குறை கேட்டார்
  • மருத்துவ மனை புதுவை ஜவகர் நகர் 5-வது குறுக்கு வீதியில் ஒரு வாடகை வீட்டில் செயல்பட்டு வருகிறது.

புதுச்சேரி:

புதுவை பஸ் நிலையம் பின்புறம் மங்க லட்சுமி நகரில் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் ஹோமி யோபதி மருத்துவமனை இயங்கி வந்தது.

தற்போது இந்த மருத்துவ மனை புதுவை ஜவகர் நகர் 5-வது குறுக்கு வீதியில் ஒரு வாடகை வீட்டில் செயல்பட்டு வருகிறது.

இந்த மருத்துவமனையில் பல்வேறு குறைபாடுகள் உள்ளதாக பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து பா.ஜனதா எம்.எல்.ஏ. அசோக்பாபு ஹோமியோபதி மருத்துவமனைக்கு சென்று திடீர் ஆய்வு செய்தார்.

அப்போது அங்கு சிகிச்சை பெற வந்த நோயாளிகளிடம் அசோக் பாபு எம்.எல்.ஏ. குறை கேட்டார். அவர்கள் ஹோமி யோபதி மருத்துவமனைக்கு வர போக்குவரத்து வசதி யில்லை. மேலும் டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் பற்றாக்குைற உள்ளது.

போதுமான மருந்துகளும் இல்லை என்று அசோக்பாபு எம்.எல்.ஏ.விடம் தெரிவித்தனர்.

இதையடுத்து அசோக்பாபு எம்.எல்.ஏ. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறையிடம் தெரிவித்து குறைகளை நிவர்த்தி செய்வதாக உறுதி அளித்தார்.

Tags:    

Similar News