ஆலோசனகை் கூட்டத்தில், மாநில பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா பேசிய போது எடுத்த படம்.
பா.ஜனதாவினருக்கு மேலிட பொறுப்பாளர் பாராட்டு
- புதுவை பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
- கூட்டத்துக்கு மாநில தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்.ஜெ.சரவணன்குமார், பொதுச் செயலாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தனர்.
புதுச்சேரி:
புதுவை பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்துக்கு மாநில தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய்.ஜெ.சரவணன்குமார், பொதுச் செயலாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தனர்.
பா.ஜனதா, எம்.எல்.ஏ.க்கள், கட்சியின் துணைத் தலைவர்கள், செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள், மாநில செயற்குழு உறுப்பினர்கள், அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், சிறப்பு அழைப்பாளராக, மாநில பா.ஜனதா பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா பங்கேற்றார். கூட்டத்தில் பேசிய மாவட்ட தலைவர்கள், நாட்டின் 75-வது சுகந்திர ஆண்டின் நிறைவாக மாநிலம் முழுவதும் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளை தெரிவித்தனர்.
மேலும், வீடுகள்தோறும் தேசியக் கொடி ஏற்றுவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பாரத மாதா சிலையை மாநிலம் முழுவதும் அலங்கரிக்கப்பட்ட வாகனம் மூலம் யாத்திரையாக கொண்டு சென்றதையும், அதனை மக்கள் வரவேற்றது குறித்து யாத்திரை குழுவினர் தெரிவித்தனர்.
மாவணர்களுக்கான கட்டுரைப் போட்டி, தியாகிகள் பற்றிய கண் காட்சி, தேசத் தலைவர்களின் சிலைகளை சுத்தம் செய்தது மற்றும் தொகுதி தோறும் மரக்கன்றுக்ள நடப்பட்டதை தெரிவித்தனர். மேலும், தியாகிகளை வீடு தேடிச் சென்று சால்வை அணிவித்து கவுரவித்ததை பட்டியலிட்டனர்.
நிறைவாக, 3 நாட்களுக்கு அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு, தேசியக் கொடியை வழங்கி ஊக்கப்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை பற்றி தெரிவித்தனர்.
பின்னர் பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா ேபசும் போது, நாட்டின் 75-ம் ஆண்டு சுதந்திர தின விழாவை சிறப்பாக கொண்டாட பாடுபட்ட அனைத்து நிர்வாகிகளை பாராட்டினார்.
இதனை தொடர்ந்து பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து பேசினார். அப்போது புதுவை அரசியல் நிலவரம் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பின் போது பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், அமைச்சர் நமச்சிவாயம் உடனிருந்தனர்.