கோப்பு படம்.
கவர்னர்-புதுவை அரசுக்கு பாராட்டு
- 1200 கோடி ரூபாய் அளவிற்கு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது .
- தற்போது அந்த திட்டத்திற்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.
புதுச்சேரி:
புதுவை பா.ஜனதா எம்.எல்.ஏ. வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
புதுவை-கடலூர் ரெயில் பாதை திட்டத்திற்கு புத்துயிர் கொடுத்து 50 கோடி ரூபாய் ஒதுக்கி இருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது.இதற்கு 1200 கோடி ரூபாய் அளவிற்கு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது .
ஏற்கனவே இந்த திட்டம் கைவிடப்பட்டதாக கூறப்பட்டு இருந்த நிலையில் தற்போது புதுவை அரசின் முயற்சியாக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் டெல்லியில் மத்திய ரெயில்வே துறை மந்திரியை சந்தித்து கோரிக்கை வைத்ததன் அடிப்படையில், தற்போது அந்த திட்டத்திற்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.
தற்போதைய நிலையில், நகரி, திண்டிவனம் திட்டத்திற்கு 100 கோடி ரூபாய் மத்திய அரசு சார்பில் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த திட்டம் புதுவை வரை நீட்டிக்கப்பட வேண்டும்.இதனால் புதுவை பயணிகள் பெருதளவில் பயனடைவர்.
மேலும் புதுவை- கடலூர் இடையே புதிய ரெயில் பாதை அமைக்க ப்பட்டால் தற்போது, சென்னையில் இருந்து விழுப்புரம், கடலூர் வழியாக செல்லும் ரயில்களில் சில ரெயில்களை, திண்டி வனம்,புதுவை, கடலூர் வழியாக இயக்க வாய்ப்பாக அமையும். இதனால் பயண தூரமும் குறையும், நேரமும், செலவும் குறையும் என்பதில் எவ்வித அய்யமும் இல்லை .
குறிப்பாக நகரி, திண்டிவனம், புதுவை திட்டத்தில், முதல்கட்டமாக திண்டிவனம், புதுவை வரையிலும், சென்னை, கடலூர் கடற்கரை சாலை திட்டத்தில், முதல் கட்டமாக புதுவை, கடலூர் வரை, புதிய ரெயில் பாதை மட்டும் அமைந்து விட்டால் புதுவை மற்றும் புதுவை சார்ந்த ரெயில் பயணிகளுக்கு பேரூதவியாக இருக்கும்.
ஆகவே ஆளுநர் மற்றும் முதல்-அமைச்சரின் துரித நடவடிக்கையால் விரைவில் புதுவை,கடலூர் ரெயில் பாதை திட்டம் செயல்பாட்டுக்கு வரும் என்பதில் ஐயமில்லை.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.