புதுச்சேரி

மாணவருக்கு பரிசு வழங்கிய காட்சி.

மாணவர்களுக்கு பாராட்டு விழா

Published On 2022-08-13 10:00 IST   |   Update On 2022-08-13 10:00:00 IST
  • பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசு வழங்கு தல் மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது
  • பள்ளியின் துணை முதல்வர் ஆஷா ராணி தலைமை தாங்கினார்.

புதுச்சேரி:

நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப்பள்ளியில் 75-வது ஆண்டு சுதந்திர தினவிழா மற்றும் கடந்த ஆண்டு பொதுத்தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசு வழங்குதல் மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது.

பள்ளியின் துணை முதல்வர் ஆஷா ராணி தலைமை தாங்கினார். விரிவுரையாளர் சரவணன் வரவேற்றார் . நெட்டப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.வும் துணை சபாநாயகருமான ராஜவேலு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார்.

தனவேலு அறக்கட்டளை நிறுவனர் தனவேல் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியளவில் முதல் 2 இடங்களை பெற்ற மாணவர்களுக்கு தங்க மோதிரம் அணிவித்தார். மேலும் அனைத்து மாணவர்களுக்கும் இலவச நோட்டுகளை வழங்கினார்.

விழாவில் விரிவுரையாளர்கள் கார்த்திகேயன், அருள்செல்வி, முத்துக்குமரன், பழனி, யமுனா ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவை பட்டதாரி ஆசிரியர் பாலசுந்தரம் தொகுத்து வழங்கினார். விரிவுரையாளர் சூரிய பிரகாசம் நன்றி கூறினார். விழாவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் மாறுவேட போட்டிகள் நடைபெற்றது.

Tags:    

Similar News