கோப்பு படம்.
முதுநிலை மருத்துவ படிப்பு 2-வது சுற்றுக்கு விண்ணப்பம்-சென்டாக் அறிவிப்பு
- மாணவர் சேர்க்கைக்கு பதிவு கட்டணம் செலுத்தி பாட விருப்பங்களை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- புதிய சீட்டு ஒதுக்கப்பட்டால் முதல் சுற்றில் அனுமதிக்கப்பட்ட சீட்டு தானாகவே ரத்தாகிவிடும்.
புதுச்சேரி:
புதுவை சென்டாக் கூடுதல் ஒருங்கிணை ப்பாளர் அமன்சர்மா வெளி யிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுவை மருத்துவ படிப்பில் உள்ள அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான 2-ம் சுற்று மாணவர் சேர்க்கைக்கு பதிவு கட்டணம் செலுத்தி பாட விருப்பங்களை சமர்ப்பி க்குமாறு அறிவுறுத்த ப்படுகிறார்கள். முதல் சுற்று கலந்தாய்வில் சீட்டு ஒதுக்கப்பட்ட கல்லூரியில் சேர்ந்த மற்றும் சேராத மாணவர்கள் அனைவரும் 2-வது சுற்று கலந்தாய்வில் பங்கேற்க தகுதி உடையவர்கள் நீட் அடிப்படையில் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு முதல் சுற்று கலந்தாய்வு மூலம் கல்லூரியில் சேர்ந்த மாணவர்களின் பட்டியல் மற்றும் காலியிட விவரம் சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 2-வது சுற்று கலந்தாய்வில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் பங்கேற்க பொது பிரிவு ரூ.25 ஆயிரம், ஓபிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி, இடபிள்யூஎஸ், இபிசி, பிசிஎம், பிடி ஆகிய பிரிவினர் ரூ 12 ஆயிரத்து 500-ம், நிர்வாக இடங்களில் பங்கேற்க அனைத்து தரப்பினரும் ரூ.2 லட்சம் பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் அனைவரும் ஆன்லைன் மூலமே பதிவு கட்டணத்தை செலுத்த வேண்டும். பதிவு கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் மட்டுமே 2-வது சுற்று கலந்தாய்வுக்கு பரிசீலிக்கப்படுவார்கள். முதல் சுற்று மூலம் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் 2-வது சுற்று கலந்தாய்வில் பதிவு கட்டணம் செலுத்தாமல் பங்கேற்கலாம்.
2-வது சுற்று கலந்தாய்வில் சீட்டு ஒதுக்கப்படாத மாணவர்களுக்கு பதிவு கட்டணம் திரும்பி தரப்படும் சீட்டு ஒதுக்கப்பட்ட மாணவர்களுக்கு மட்டுமே பதிவு கட்டணம் தக்க வைக்கப்படும். கல்வி கட்டணம் செலுத்தும்போது பதிவு கட்டணத்தை தவிர்த்து விட்டு மீதமுள்ள கட்டணத்தை செலுத்த வேண்டும்.
2-வது சுற்றில் இடம் ஒதுக்கப்பட்டு கல்லூரியில் சேராத மாணவர்கள் பதிவு கட்டணம் பறிமுதல் செய்யப்படும். மேலும் 2-வது சுற்று கலந்தாய்வு பாட விருப்பத்தேர்வு அடிப்படையில் புதிய சீட்டு ஒதுக்கப்பட்டால் முதல் சுற்றில் அனுமதிக்கப்பட்ட சீட்டு தானாகவே ரத்தாகிவிடும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் முதல் கட்ட கலந்தாய்வு முடிவில் முதுநிலை மருத்துவ படிப்பில் காலியாக உள்ள இடங்கள் குறித்த விபரம் வருமாறு:-
இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி 20, பிம்ஸ் 27 மணக்குள விநாயகர் 40 வெங்கடே ஸ்வரா 43 என அரசு ஒதுக்கீட்டில் மொத்தம் 130 இடங்களும், பிம்ஸ் 28, மணக்குள விநாயகர் 60, வெங்கடேஸ்வரா 60 என நிர்வாக ஒதுக்கீட்டில் மொத்தம் 148 இடங்களும் காலியாக உள்ளது.