புதுச்சேரி

கோப்பு படம்.

விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பு பயிற்சி முகாம்

Published On 2023-02-26 10:51 IST   |   Update On 2023-02-26 10:51:00 IST
  • மத்திய அரசின் ஆத்மா திட்டத்தின் வாயிலாக ஒரு நாள் கால்நடை வளர்ப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.
  • தனியார் நிறுவன அதிகாரி மணிமாறன் தீவனப்புல் பராமரிப்பு தீவனப் பொருட்களின் வகைகளை பற்றி விவசாயிகளுக்கு விளக்கி கூறினார்.

புதுச்சேரி:

அரசு வேளாண் மற்றும் விவசாய நலத்துறை கரிக்கலாம்பாக்கம் உழவர் உதவியகத்தின் சார்பில் மத்திய அரசின் ஆத்மா திட்டத்தின் வாயிலாக ஒரு நாள் கால்நடை வளர்ப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு வேளாண் அலுவலர் தினகரன் தலைமை தாங்கி வரவேற்றார். கால்நடை டாக்டர் பிரீத்தா கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் கையாளக்கூடிய உத்திகள் மற்றும் தீவன பராமரிப்பு மேலும் சினை பிடிக்காமல் இருக்கும் மாடுகளுக்கு மருத்துவம் எவ்வாறு செய்வது என்பது குறித்து விளக்கினார்.

தனியார் நிறுவன அதிகாரி மணிமாறன் தீவனப்புல் பராமரிப்பு தீவனப் பொருட்களின் வகைகளை பற்றி விவசாயிகளுக்கு விளக்கி கூறினார். கால்நடை டாக்டர் செல்வமுத்து பால் உற்பத்தியை பெருக்குவதற்கு கால்நடை விவசாயிகள் பின்பற்றக்கூடிய வழிமுறைகள் பற்றி விளக்கினார்.

இறுதியாக கிராம விரிவாக்க பணியாளர் கிருஷ்ணன் நன்றி கூறினார். விழாவின் ஏற்பாடுகளை தப்பு சாமி செய்திருந்தார்.முகாமில் கால்நடை விவசாயிகளுக்கு ஒரு கிலோ சத்துமாவு இலவசமாக வழங்கப்பட்டது.

Tags:    

Similar News