புதுச்சேரி

உலக கிக் பாக்சிங் போட்டில் வெற்றி பெற்று, ரெயில் மூலம் புதுவை திரும்பிய வீரர்களை சங்க தலைவர் இளங்கோவன் மற்றும் நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்ற காட்சி.

புதுவை வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

Published On 2022-11-09 11:01 IST   |   Update On 2022-11-09 11:01:00 IST
  • உலக கிக் பாக்சிங் போட்டியில் பதக்கம் வென்று சாதனை புரிந்த புதுவை வீரர்களுக்கு ரெயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
  • இந்தியா சார்பில் பங்கேற்ற புதுவையில் காவல் துறையில் போலீஸ் ஏட்டாக பணிபுரியும் மோகன் சீனியர் 84 கிலோ எடைப் பிரிவு மற்றும் ஓபன் ஹெவி வெயிட் பிரிவில் 2 தங்கப்பதக்கம் வென்றார்.

புதுச்சேரி:

உலக கிக் பாக்சிங் போட்டியில் பதக்கம் வென்று சாதனை புரிந்த புதுவை வீரர்களுக்கு ரெயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

சர்வதேச கிக் பாக்சிங் பெடரேஷன் மற்றும் இந்திய கிக் பாக்சிங் பெடரேஷன் சார்பில், டெல்லியில் உள்ள சர்வதேச உள்விளையாட்டரங்கில் கடந்த 2-ம்தேதி முதல் 6-ம் தேதிவரை உலக கிக் பாக்சிங் போட்டி நடந்தது.

இப்போட்டியில் 33 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில், இந்தியா சார்பில் தகுதி பெற்ற வீரர்கள், பயிற்சியாளரான புதுவை மாநில கிக் பாக்சிங் சங்க தலைவர் இளகோவன் தலைமையில் பங்கேற்றனர்.

இந்தியா சார்பில் பங்கேற்ற புதுவையில் காவல் துறையில் போலீஸ் ஏட்டாக பணிபுரியும் மோகன் சீனியர் 84 கிலோ எடைப் பிரிவு மற்றும் ஓபன் ஹெவி வெயிட் பிரிவில் 2 தங்கப்பதக்கம் வென்றார்.

சப்-ஜூனியர் 27 கிலோ எடை பிரிவில் பவித்ரன், பெண்கள் ஜூனியர் பிரிவில் 63 கிலோ எடை பிரிவில் ஜனனி, 73 கிலோ எடை பிரிவில் கவுசல்யா, சப் ஜூனியர் பெண்கள் 53 கிலோ எடைப் பிரிவில் சங்கவி ஆகியோர் தங்கப் பதக்கம் வென்றார்.

உலக கிக் பாக்சிங் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று பதக்கம் வென்ற புதுவை வீரர்கள் டெல்லியில் இருந்து ரெயில் மூலம் நேற்று புதுவைக்கு வந்தனர்.

அவர்களுக்கு, புதுவை மாநில ஒருங்கிணைந்த விளையாட்டு வீரர்கள் நலச் சங்க சேர்மன் ஆளவந்தார், புதுவை மாநிலகிக் பாக்சிங் சங்க தலைவர் இளங்கோவன், சங்க நிர்வாகிகள் அமிர்தராஜ், அய்யனார், விநாயகம், அபிலாஷ், பிரவீன்குமார், செப ஸ்தியன், சந்தோஷ்குமார், ராகுல் ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Tags:    

Similar News