புதுச்சேரி

108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய காட்சி.

சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்தை ஆம்புலன்ஸ் ஊழியர்கள் முற்றுகை

Published On 2023-09-04 14:04 IST   |   Update On 2023-09-04 14:04:00 IST
  • 11-ந் தேதி வரை கோரிக்கை அட்டை, கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்து கின்றனர்.
  • போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பணிநிரந்தரம் செய்யக்கோரியும், சம்பளம் வழங்கக்கோரியும் கோஷம் எழுப்பினர்.

புதுச்சேரி:

புதுவை சுகாதாரத்துறை 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பணிநிரந்தரம் வழங்க வேண்டும். காலத்தோடு மாத சம்பளம் வழங்க வேண்டும். உதவியாளர் நியமிக்க வேண்டும்.

மருத்துவ விடுப்பு அளிக்க வேண்டும் என்பது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவை, காரைக்கால், ஏனாம் சங்கத்தினர் பல கட்ட போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இன்று முதல் 11-ந் தேதி வரை கோரிக்கை அட்டை, கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்து கின்றனர்.

இன்று புதுவை சட்டசபை அருகில் உள்ள சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகை யிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் புருஷோத்தமன் தலைமை வகித்தார்.

புதுவை அரசு ஓட்டுநர்கள் சங்கம் ரவிச்சந்திரன், சங்க நிர்வாகிகள் முருகன், லூர்துமரியநாதன், பிரபாகரன், பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பணிநிரந்தரம் செய்யக்கோரியும், சம்பளம் வழங்கக்கோரியும் கோஷம் எழுப்பினர்.

வருகிற 11-ந் தேதி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

Tags:    

Similar News