புதுச்சேரி

தமிழக-புதுச்சேரி அளவிலான வினாடி வினா போட்டியில் 2-ம் இடம் பிடித்த அமலோற்பவம் லூர்து அகாடமி மாணவர்களை பள்ளி தாளாளர் லூர்து சாமி பாராட்டிய காட்சி.

அமலோற்பவம் அகாடமி மாணவர்கள் சாதனை

Published On 2023-08-23 09:47 IST   |   Update On 2023-08-23 09:47:00 IST
  • அமலோற்பவம் லுார்து அகாடமி, பிளஸ்1 மாணவர்கள் பூவராகவன், நவீனபிரியன் 2-ம் இடம் பிடித்து சாதனை படைத்தனர்.
  • முன்னாள் சர்வ தேச தடகள விளையாட்டு வீராங்கனை காயத்ரி ஆகி யோர் வழங்கினர்.

புதுச்சேரி:

சென்னை அண்ணா நகரில் எஸ்.பி.ஐ.ஓ.ஏ., கல்லுாரி அரங்கில் நடந்த விளையாட்டுத்துறை சார்ந்த வினாடி வினா போட்டியில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியிலிருந்து 720 மாணவர்கள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியை வினாடி வினா தொகுப்பாளர் ரகு நடத்தினார்.

தகுதி தேர்வாக நடந்த இத்தேர்வில் 6 இணை யர்கள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர். இவர் களில், 3 இணையர்கள் அமலோற்பவம் லுார்து அகாடமி மாண வர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 6 இணையர்கள் பங்கு கொண்ட இறுதிப் போட்டி விறுவிறுப்பாக நடந்த 6 சுற்றுகளிலும் பதிலளித்து அமலோற்பவம் லுார்து அகாடமி, பிளஸ்1 மாணவர்கள் பூவராகவன், நவீனபிரியன் 2-ம் இடம் பிடித்து சாதனை படைத்தனர்.

இவர்களுக்கு ரூ.25,000 ரொக்கப்பரிசும் ரூ.25,000மதிப்புள்ள மிதி வண்டியும் பரிசாக வழங் கப்பட்டது. பரிசுகளை, முன்னாள் பிரபல ஹாக்கி வீரரும் பயிற்சியாளரு மான வாசுதேவன்பாஸ்கரன் மற்றும் முன்னாள் சர்வ தேச தடகள விளையாட்டு வீராங்கனை காயத்ரி ஆகி யோர் வழங்கினர்.

போட்டியில் பரிசு பெற்ற அமலோற்பவம் லுார்து அகாடமி மாணவர்கள் பூவராகவன், நவீனபிரியன் ஆகியோரை, அகாடமியின் நிறுவனரும், அமலோற்பவம் பள்ளியின் தாளாளருமான லுார்துசாமி பாராட்டினர்.

Tags:    

Similar News