புதுச்சேரி

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சந்திரபிரியங்கா, உழவர்கரை தொகுதி எம்.எல்.ஏ. சிவசங்கரன் ஆகியோரிடம் மனு அளித்த காட்சி.

ஆதிதிராவிட நலத்துறை அதிகாரிகள் ஆய்வு

Published On 2023-05-18 13:31 IST   |   Update On 2023-05-18 13:31:00 IST
  • 7 பேருக்கு பட்டா வழங்கப்பட்டு வீடுகள் கட்டி கொடுக்கப்படவில்லை.
  • பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து விரைவில் அதற்கான தீர்வு காணப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.

புதுச்சேரி:

உழவர்கரை தொகுதிக்குட்பட்ட பிச்சவீரன்பட்டில் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் 127 வீடுகள் கட்டப்பட்டு 2016 ஆண்டில் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதில் 52 நபர்களுக்கு வீடு வழங்குவதாக ஆணை வழங்கப்பட்ட நிலையில் அவர்களுக்கு வீடு இல்லை. ஏழு பேருக்கு பட்டா வழங்கப்பட்டு வீடுகள் கட்டி கொடுக்கப்படவில்லை. பல ஆண்டுகளாக இந்த குளறுபடி நீடித்து வரும் நிலையில்.

அங்கிருந்த அரசு இடங்கள் ஒரு சிலரால் ஆக்கிரமிப்பு செய்யப் பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு களை அகற்றி உரியவர்க ளுக்கு வீடு கட்டி கொடுக்க வேண்டும் என பிச்ச வீரன்பட்டு பொதுமக்கள் சார்பில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா, உழவர்கரை தொகுதி எம்எல்ஏ சிவசங்கரன் ஆகியோரிடம் மனு அளிக்கப்பட்டது.

இந்நிலையில்  சிவசங்கரன் எம்.எல்.ஏ மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் சாய்.இளங்கோவன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் பிச்ச வீரன்பட்டில் உள்ள சர்ச்சைக்குரிய இடங்களை ஆய்வு செய்தனர். அப்போது அங்குள்ள பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து விரைவில் அதற்கான தீர்வு காணப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். 

Tags:    

Similar News