புதுச்சேரி

கோப்பு படம்.

வணிகர் நல வாரியத்தை செயல்படுத்த நடவடிக்கை

Published On 2023-05-07 11:45 IST   |   Update On 2023-05-07 11:45:00 IST
  • வர்த்தக சபை நிர்வாகிகளிடம் முதல்-அமைச்சர் ரங்கசாமி உறுதி
  • வர்த்தக சபை தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார்.

புதுச்சேரி:

ஆண்டுதோறும் மே 5-ந் தேதி வணிகர் தினமாக தமிழ்நாடு, புதுவையில் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி, புதுவை வர்த்தக சபையில் வணிகர் தினவிழா சாரம் காமராஜர் சாலையில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. வர்த்தக சபை தலைவர் குணசேகரன் தலைமை தாங்கினார்.

துணை தலைவர் ரவி வரவேற்றார். இணை பொதுச்செயலாளர் முகமது சிராஜ் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு, புதுவை வணிகத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக வணிகப் பணியாற்றிய 45 உறுப்பினர்களுக்கு சாதனையாளர் விருது வழங்கி கவுரவித்தார். ஆணையர் முகம்மது மன்சூர் வாழ்த்தி பேசினார்.

வணிகர் நல வாரியத்தை முழு அளவில் செயல்படுத்த உரிய நடவ டிக்கை எடுக்க முதல்-அமைச்சரிடம் வர்த்தக சபை சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி இந்த ஆண்டில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். பொருளாளர் ரவி நன்றி கூறினார்.

விழாவில் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் தேவக்குமார், ஞானசம்பந்தம், பிரகாஷ் அமீர்தகண்டேசன், நமச்சிவாயம், ராஜவேல், குமார், ஜெய்கணேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News