புதுச்சேரி

கோப்பு படம்.

மாங்குரோவ் காடுகளை அழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - தமிழ்நாடு மீனவர் பேரவை வலியுறுத்தல்

Published On 2023-09-05 14:10 IST   |   Update On 2023-09-05 14:10:00 IST
  • மீனவர் பேரவையின் புதுவை தலைவர் புகழேந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
  • காற்றில் ஆக்சிசன் அளவை அதிகரிக்கவும், சுற்றுச் சூழல் பாது காப்பில் முக்கிய பங்காக இருந்தது.

புதுச்சேரி:

தமிழ்நாடு மீனவர் பேரவையின் புதுவை தலைவர் புகழேந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி துறைமுக நுழைவு வாயில் அருகே அரசால் பாதுகாக்கப்பட்டு சதுப்பு நிலக்காடுகளில் வளர்க்கபட்டு வந்த மாங்குரோவ் மரங்கள் நிலத்தடி நீர்வளம் பெருகவும், சுனாமி போன்ற பேரிடர் காலங்களில் வெள்ளத் தடுப்புகளாகவும், காற்றில் ஆக்சிசன் அளவை அதிகரிக்கவும், சுற்றுச் சூழல் பாது காப்பில் முக்கிய பங்காக இருந்தது.

தற்போது மாங்குரோவ் காடுகளை, தனியார் நிறுவனம் கடந்த ஒரு மாத காலமாக புல்டோசர் மூலம்அ ழித்து வருவது மட்டுமல்லாமல் அரசுக்கு சொந்தமான அந்த இடத்தை ஆக்கிரமித்து இது தனியாருக்கு சொந்தமான இடம்" என்று குறிப்பிட்டு அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். ஆனால் வனத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மவுனமாக இருப்பது வியப்பளிக்கிறது.

இந்த இடம் துறைமுக விரிவாக்க அபிவிருத்திக்காக பயன்படுத்த இருந்ததாக அறியப்படுகிறது. அப்படி துறைமுக விரிவாக்கத்திற்கு பயன்படுத்தி னால், இயற்கை பேரிடர் காலங்களில் படகுகளை பாதுகாப்பாக வைக்கமுடியும்.

தொடர்ந்து புதுவை மாநில மீனவர்களின் நலத்தி ற்கும், வளத்திற்கும் குந்தகம் விளைவிக்கும் அந்த தனியார் நிறுவனத்துக்கு எதிராக மீனவர்களை ஒன்று திரட்டி மிகப் பெரிய போராட்டத்தை நடத்துவோம். எனவே தனியார் நிறுவனம் ஆக்கிரமித்த அரசு நிலத்தை மீட்டு மீனவர்கள் படகுத் தளம் அமைக்க அரசு வழிவகை செய்யவேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News