கோப்பு படம்.
அரசுக்கு ஒத்துழைப்பு தராத அதிகாரிகள் மீது நடவடிக்கை
- முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
- சண்டை போட்டுத்தான் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்பது தேவையற்றது.
புதுச்சேரி:
புதுவையில் பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் பிரதமர் மோடியின் 9 ஆண்டு கால சாதனை விளக்க புத்தகம் வெளியீட்டு விழா நடந்தது.
முன்னாள் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் புத்தகத்தை வெளியிட்ட பின் நிருபர்களிடம் கூறியதாவது:-
பிரதமர் மோடியின் 9 ஆண்டு கால சாதனை விளக்க கூட்டத்துக்கு பின் புதுவையில் பா.ஜ.க. எழுச்சி பெற்றுள்ளது. புதுவை அரசுக்கு அதிகாரிகள் ஒத்துழைப்பதில்லை என முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார். அரசுக்கு ஒத்துழைப்பு தராத அதிகாரிகள் மீது முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுப்பார்.
உலகிற்கே வழிகாட்டும் தலைவராக பிரதமர் மோடி உள்ளார். அவர் வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் போட்டி யிட்டால் அது தமிழகத்திற்கே பெருமை.
பிரதமர் எங்கு போட்டியிட வேண்டும் என்பதை பா.ஜ.க. தலைமை முடிவு செய்யும். அவர் போட்டியிடும் தொகுதி எந்த அளவுக்கு வளர்ச்சி பெறும் என்பதற்கு வாரணாசி உதாரணம்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடந்து வரும் பிரச்சினைகள் தேவையில்லாத ஒன்று. சண்டை போட்டுத்தான் கோவிலுக்கு செல்ல வேண்டும் என்பது தேவையற்றது.
இவ்வாறு அவர் தெரிவித்தார். பேட்டியின்போது மாநில தலைவர் சாமிநாதன், வி.பி. ராமலிங்கம்
எம்.எல்.ஏ. பொதுச் செயலாளர் மோகன்குமார், துணை தலைவர்கள் தங்க விக்ரமன், முருகன், ஆகியோர் உடனிருந்தனர்.