சாதனை படைத்த மாணவர்களை வாழ்த்திய போது எடுத்த படம்.
சாதனை படைத்த மாணவர்கள் சிங்கப்பூர் பயணம்
- கிரீன்ஹவுஸ் டெக்டாக்ஸ் மற்றும் ஹாக் ஷாக் நிகழ்ச்சியில், அவர்கள் தயாரித்த மென்பொருள் திட்டத்தை காட்சிப்படுத்துகிறார்கள்.
- தொழிற்நுட்பத் துறையின் வழிகாட்டிகளான சரவணன் மற்றும் பாலாஜி ஆகியோர் பாராட்டி கவுரவித்தனர்.
புதுச்சேரி:
அகில இந்திய அளவில் அல்கோ பாரத் பவுண்டே ஷன் நடத்திய கிரீன்ஹவுஸ் அல்கோ பாரத் ஹேக்கத்தான்-2022 போட்டியில் மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியின் தகவல் தொழிநுட்பத் துறை 2-ம் ஆண்டு மாணவர்கள் அச்சுதன், தேவதர்ஷினி, சுவேதா ஆம்ப்ரோஸ், லிக்கித்தா மற்றும் தனஸ்ரீ ஆகியோர் சமர்ப்பித்த மென்பொருள் திட்டம்
தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் 3 நாள் சிங்கப்பூர் பயணம் செல்ல வாய்ப்பை பெற்றுள்ளனர். சிங்கப்பூரில் தொடங்க இருக்கும் கிரீன்ஹவுஸ் டெக்டாக்ஸ் மற்றும் ஹாக் ஷாக் நிகழ்ச்சியில், அவர்கள் தயாரித்த மென்பொருள் திட்டத்தை காட்சிப்படுத்துகிறார்கள். இந்த வாய்ப்பை பெற்ற மாணவர்களை மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளையின் தலைவரும் மேலாண் இயக்குனருமான தனசேகரன், துணைத் தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. சுகுமாரன், செயலாளர் நாராயணசாமி கேசவன், கல்லூரியின் இயக்குனர் மற்றும் முதல்வர் வெங்கடாசலபதி, தகவல் தொழிநுட்பத் துறைத்தலைவர் ராஜூ, தகவல் தொழிற்நுட்பத் துறையின் வழிகாட்டிகளான சரவணன் மற்றும் பாலாஜி ஆகியோர் பாராட்டி கவுரவித்தனர்.