புதுச்சேரி

தவளக்குப்பம் நேஷனல் பள்ளி நிர்வாகி டாக்டர் கிரண்குமாருக்கு ஆசான் விருது வழங்கப்பட்ட காட்சி.

நேஷனல் பள்ளி நிர்வாகிக்கு ஆசான் விருது

Published On 2023-09-15 10:21 IST   |   Update On 2023-09-15 10:21:00 IST
  • சிறப்பு விருந்தினராக வருமான வரித்துறை ஆணையர் நந்தகுமார் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.
  • ரோட்டரி கிளப் சென்னையின் (வடக்கு) தலைவர் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

புதுச்சேரி:

சென்னை (வடக்கு) ரோட்டரி கிளப் சார்பில் ஆசான் விருது வழங்கும் விழா சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.

விழாவில் சிறப்பு விருந்தினராக வருமான வரித்துறை ஆணையர் நந்தகுமார் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.

எத்திராஜ் மகளிர் கல்லூரியின் தலை வர் முரளிதரன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் புதுவை தவளக்குப்பம், நேஷனல் உயர்நிலைப்பள்ளியின் நிர்வாகி டாக்டர் கிரண்குமாரின் சிறப்பான கல்வி சேவையை பாராட்டி ஆசான் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

விழாவில் ரோட்டரி கிளப் சென்னையின் (வடக்கு) தலைவர் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News