புதுச்சேரி

கோப்பு படம்.

மஞ்சள் காமாலைக்கு வாலிபர் பலி

Published On 2023-09-22 14:15 IST   |   Update On 2023-09-22 14:15:00 IST
  • 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை புதுவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி:

புதுவை மதகடிப்பட்டு நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர் தேசிங்கு (வயது 55) நரிக்குறவர். பல ஆண்டுகளுக்கு முன்னர் இவர் சிதம்பரம் கீதைப்பாளையம் பகுதியில் தொழில் செய்ய சென்றள்ளார்.

அப்போது தாய்தந்தை இல்லாத 5 வயதுடைய சுரேஷ் என்ற சிறுவனை கண்டு, தன்னுடனேயை அழைத்து வந்து வளர்த்து வந்தார். தற்போது 22 வயதான சுரேஷ் குடிபழக்கத்திற்கு ஆளாகியுள்ளார்.

இதனால் மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று உடல்நிலை மோசமானது. உடனே அப்பகுதியை சேர்ந்த நரிக்குறவ மக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை புதுவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே சுரேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் திருபுவனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News