புதுச்சேரி

ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் அதன் தலைவர் தேனீ.ஜெயக்குமார் தலைமையில் முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் கோரிக்கை மனு அளித்த காட்சி.

விளையாட்டுக்கு தனித்துறை ஏற்படுத்த வேண்டும்

Published On 2023-03-11 10:44 IST   |   Update On 2023-03-11 10:44:00 IST
விளையாட்டுக்கு தனித்துறை ஏற்படுத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் புதுவை ஒலிம்பிக் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

புதுச்சேரி:

விளையாட்டுக்கு தனித்துறை ஏற்படுத்த வேண்டும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் புதுவை ஒலிம்பிக் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

புதுவை மாநில ஒலிம்பிக் சங்க தலைவரான அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தலைமையில் நிர்வாகிகள் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

விளையாட்டு துறை புதுவையில் விளையாட்டுத்துறை ஏற்படுத்த வேண்டும். பட்ஜெட்டில் விளையாட்டுக்கு 5 சதவீத நிதியை ஒதுக்க வேண்டும். அனைத்து வசதிகளுடன் கூடிய விளையாட்டு கிராமம் ஏற்படுத்த வேண்டும்.

இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டு இருந்தது. மனுவை பெற்றுக் கொண்ட முதல்-அமைச்சர் ரங்கசாமி கோரிக்கைகள் குறித்து உடனடியாக ஆவண செய்வதாக உறுதியளித்தார். இந்நிகழ்ச்சியின் போது சங்க நிர்வாகிகளான சிவசங்கரன் எம்.எல்.ஏ., கராத்தே வளவன், செயலாளர் தனசேகர், பொருளாளர் நாராயணசாமி, கபடி சங்கம் ஜெயராமன், சி.இ.ஓ. சங்க முத்து கேசவன், துணை தலைவர்கள் குணசேகரன், கோபு ஜெயபால், பூபாலன், முத்துகிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News