புதுச்சேரி

சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை அங்காளன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி.

90 லட்சம் செலவில் திட்டப்பணிகள்- அங்காளன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

Published On 2022-07-06 10:43 IST   |   Update On 2022-07-06 10:43:00 IST
  • ஆதி திராவிடர் மேம்பாட்டு வரைநிலைக்கழகம்
  • ரூ.48 லட்சம் செலவில் சமுதாய நலக்கூடம்

புதுச்சேரி:

புதுவை அரசின் ஆதி திராவிடர் மேம்பாட்டு வரைநிலைக்கழகம் சார்பில் திருபுவனை தொகு திக்குட்பட்ட சின்னபேட்டில் ரூ.26 லட்சம் செலவில் கழிவுநீர் வாய்க்கால் மற்றும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியும், பெரியபேட் பகுதியில் ரூ.48 லட்சம் செலவில் சமுதாய நலக்கூடம் மற்றும் ரூ.4¼ லட்சம் செலவில் விடுப்பட்ட பகுதியில் சிமெண்ட் சாலை அமைக்கப்படும் பணியும், கொத்தபுரி நத்தம் சுடுகாட்டு பாதைக்கு ரூ.12¼ லட்சம் செலவில் தார் சாலை அமைக்கும் பணியும் மேற்கொள்ளப்படவுள்ளது. இப்பணிகளை அங்காளன் எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ஆதி திராவிட மேம்பாட்டு வரைநிலைக்கழக அதிகாரிகள், கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News