புதுச்சேரி

கோப்பு படம்.

புதுவையில் 77 பேருக்கு கொரோனா

Update: 2022-08-14 08:20 GMT
  • புதுவை மாநிலத்தில் நேற்று 1,220 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
  • மாகியில் தொற்று பாதிப்பு இல்லை

புதுச்சேரி:

புதுவை மாநிலத்தில் நேற்று 1,220 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் 77 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 52 பேர் புதுவையையும், 21 பேர் காரைக்காலையும், 4 பேர் ஏனாமையும் சேர்ந்தவர்கள்,

மாகியில் தொற்று பாதிப்பு இல்லை. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 6 பேர் மருத்துவமனையிலும், 476 பேர் வீட்டு தனிமையிலும் என ஒட்டுமொத்தமாக 482 பேர் சிகிச்சையில் உள்ளனர்.இன்று 49 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதில் 43 பேர் புதுவையையும், 3 பேர் காரைக்காலையும், 3 பேர் ஏனாமையும் சேர்ந்தவர்கள்.

புதுவை மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 72 ஆயிரத்து 126 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 1 லட்சத்து 69 ஆயிரத்து 677 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். 1,967 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இத்தகவலை சுகாதா ரத்துறை தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News