புதுச்சேரி

கோப்பு படம்.

புதுவையில் 71 பேருக்கு கொரோனா

Published On 2022-08-28 14:26 IST   |   Update On 2022-08-28 14:26:00 IST
  • புதுவை மாநிலத்தில் நேற்று 820 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
  • புதுவை மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 13 பேர் மருத்துவமனையிலும், 322 பேர் வீட்டு தனிமையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புதுச்சேரி:

புதுவை மாநிலத்தில் நேற்று 820 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. 

இதில் 71 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. புதுவையில் 54 பேரும், காரைக்காலில் 12 பேரும், ஏனாமில் 5 பேரும் இதில் அடங்குவர். மாகியில் தொடர்ந்து தொற்று பாதிப்பு இல்லாத பகுதியாக உள்ளது.

புதுவை மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 13 பேர் மருத்துவமனையிலும், 322 பேர் வீட்டு தனிமையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஒட்டு மொத்தமாக மாநிலம் முழுவதும் 335 நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனர். 35 பேர் சிகிச்சையில் இருந்து குணமடைந்துள்ளனர். இதில் 34 பேர் புதுவையையும், ஒருவர் காரைக்காலையும் சேர்ந்தவர்.

புதுவை மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 72 ஆயிரத்து 754 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 1 லட்சத்து 70 ஆயிரத்து 451 பேர் குணமடைந்துள்ளனர். 1968 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்த தகவல்களை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News