புதுச்சேரி

அமைச்சர் நமச்சிவாயம்

கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு 2 நாள் விடுமுறை

Published On 2022-11-03 23:47 IST   |   Update On 2022-11-03 23:47:00 IST
  • கனமழை எதிரொலியாக புதுச்சேரியில் வெள்ளி, சனியன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளது
  • புதுவையில் கடந்த இரு தினங்களாக மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

புதுச்சேரி:

வடகிழக்கு பருவமழை தொடங்கி தற்போது தீவிரமடைந்துள்ளது. 2 நாட்களாக மழை புதுவையில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது.

நேற்று மதியம் 2 மணிக்கு மேல் விட்டு விட்டு மழை பெய்தது. சாரலாக தொடங்கிய மழை அடுத்தடுத்து வேகம் பிடித்து கனமழை கொட்டி தீர்த்தது. தொடர்ந்து இரவிலும் விட்டு விட்டு மழை பெய்தது. வில்லியனூர், திருபுவனை, திருக்கனூர் உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

தொடர் மழையால் மாநிலம் முழுவதும் குளிர்ந்து காணப்படுகிறது. கடற்கரை, சுண்ணாம்பாறு படகு குழாம் என சுற்றுலா தலங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. தொடர்ந்து மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து புதுவை, காரைக்காலில் உள்ள பள்ளிகளுக்கு நாளை, நாளை மறுதினம் என 2 நாள் விடுமுறை விடப்பட்டுள்ளது என 

Tags:    

Similar News