புதுச்சேரி

சமுதாய நலக்கூடம் சீரமைக்கும் பணியை முதல்-அமைச்சர் ரங்கசாமி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்த காட்சி.

ரூ.2 1/2 கோடியில் நவீன சமுதாய நலக்கூடம்-முதல்-அமைச்சர் ரங்கசாமி பணியை தொடங்கி வைத்தார்

Published On 2023-02-22 14:32 IST   |   Update On 2023-02-22 14:32:00 IST
  • ராஜ்பவன் தொகுதி வாழைக்குளம் சமுதாய நலக்கூடம் மிகவும் சேதமடைந்திருந்தது.
  • புதுவை நகராட்சி மூலம் புதிதாக நவீன வசதியுடன் கூடிய சமுதாய நலக்கூடம் கட்ட பூமி பூஜை நடந்தது.

புதுச்சேரி:

ராஜ்பவன் தொகுதி வாழைக்குளம் சமுதாய நலக்கூடம் மிகவும் சேதமடைந்திருந்தது. இதை சீரமைக்க வேண்டும் என தொகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் முயற்சியால் ரூ.2 கோடியே 45 லட்சத்தில் புதுமையுடன் கூடிய ஒருங்கிணைந்த நீடித்த வளர்ச்சி நகர்ப்புற முதலீட்டு திட்டத்தின் கீழ் புதுவை நகராட்சி மூலம் புதிதாக நவீன வசதியுடன் கூடிய சமுதாய நலக்கூடம் கட்ட பூமி பூஜை நடந்தது. முதல்-அமைச்சர் ரங்கசாமி பூமிபூஜை செய்து கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் லட்சுமி நாராயணன், பிரகாஷ்குமார் எம்.எம்.ஏ, ஸ்மார்ட் சிட்டி தலைமை செயல் அதிகாரி, கலெக்டர் மணிகண்டன், உள்ளாட்சித்துறை செயலர் ஜவகர், இயக்குனர் ரவிதீப்சிங், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சத்தியமூர்த்தி, புதுவை நகராட்சி ஆணையர் சிவக்குமார், செயற்பொ றியாளர் சிவபாலன், உதவி பொறியாளர் பழனிராஜா, இளநிலை பொறியாளர் சிவசுப்பிரமணியம், ராஜ்பவன் தொகுதி என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர்கள் குமரன், மலர்மன்னன், வைத்திகுப்பம், குருசுகுப்பம் மீனவ பஞ்சாயத்தார், வாழைக்குளம், சின்னையாபுரம் ஊர் பொதுமக்கள், நகராட்சி அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News