செய்திகள்
பக்தர்கள் வருகை குறைந்ததால் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் வெறிச்சோடி கிடந்த காட்சி.

கொரோனா அச்சத்தால் திருவண்ணாமலை கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் குறைந்தது

Published On 2021-04-12 11:11 IST   |   Update On 2021-04-12 11:11:00 IST
வருகிற 14ந்தேதி தமிழ்ப்புத்தாண்டு பிறக்கிறது. அதனையொட்டி திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்று கூறப்படுகிறது.
திருவண்ணாமலை :

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு ஞாயிறு விடுமுறை தினத்தில் சாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். ஆனால் நேற்று கொரோனா அச்சத்தால் பக்தர்கள் வருகை மிகவும் குறைவாக காணப்பட்டது.

கோடை வெயிலை பொருட்படுத்தாமல் நேற்றும் பக்தர்கள் கிரிவலம் சென்றனர். நேற்று அமாவாசை தினம் என்பதால் சித்தர் சன்னதிகளில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

வழி எங்கும் கோடைகாலம் என்பதால் சோடா மற்றும் குளிர் பானங்கள் விற்பனை களை கட்டியது. தர்பூசணி, முலாம்பழம், இளநீர்,மோர் உள்ளிட்டவைகளை மக்கள் ஆர்வமுடன் வாங்கி தாகம் தணித்தனர்.



குழந்தைகள், சிறுவர்கள் நடக்க சிரமப்பட்டதால் அவர்களை பெரியவர்கள் தூக்கிக்கொண்டு கிரிவலம் சென்றனர். முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளும் சென்றனர்.

இந்த நிலையில் வருகிற 14ந்தேதி தமிழ்ப்புத்தாண்டு பிறக்கிறது. அதனையொட்டி திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்று கூறப்படுகிறது.

இதையொட்டி தேவையான முன்னேற்பாடு பணிகளில் கோவில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

சமீபத்தில் பக்தர்கள் பல சன்னதிகளை காணவும் அனுமதிக்கப்பட்டனர். 10-ந்தேதி முதல் குறைந்த சன்னதிகளை காணவே அனுமதி வழங்கப்படுகிறது. மேலும் பக்தர்கள் தரிசனம் முடித்து சிறிது நேரம் கோவில் வளாகத்தில் இளைப்பாறி சென்று வந்தனர். அதற்கும் தற்போது அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News