செய்திகள்

மானாமதுரை பிரித்தியங்கரா தேவி கோவிலில் அமாவாசை சிறப்பு யாகம்

Published On 2019-04-05 13:18 IST   |   Update On 2019-04-05 13:18:00 IST
சிவகங்கையில் பிரசித்தி பெற்ற மகா பஞ்ச முக பிரித்தியங்கிரா தேவி கோவிலில் சண்டி யாகமும், அதைத் தொடர்ந்து ராம்ராஜ்ய லட்சுமி யாகம், பிரித்தியங்கிரா யாகம் நடந்தது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள பஞ்சபூதேஸ்வரத்தில் பிரசித்தி பெற்ற மகா பஞ்ச முக பிரித்தியங்கிரா தேவி கோவில் உள்ளது.

இங்கு 24 மணி நேரமும் அன்னதானம் நடைபெறும். நேற்று மாலை பங்குனி மாத அமாவாசை தினத்தை முன்னிட்டு வெயில் குறைந்து மழை பெய்ய வேண்டியும், மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ வேண்டியும் சண்டி யாகம் நடந்தது. அதைத் தொடர்ந்து ராம்ராஜ்ய லட்சுமி யாகம், பிரித்தியங்கிரா யாகம் நடந்தது.

இதில் அனைத்து வகை யான பழங்கள் உயர்தர மிளகு, தேன், பட்டு புடவை கள் மற்றும் தங்கம், வெற்றி ஆபரணங்கள், பூ மாலைகள் போட்டு யாக வேள்வியில் சிறப்பு பூஜை நடந்தது. பஞ்சமுக பிரித்தியங்கிரா தேவிக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு தங்க கவசம் சாத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அன்னதானமும் நடந்தது.

Similar News