செய்திகள்
ராமேசுவரம் கோவிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா 20-ந் தேதி தொடங்குகிறது
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா வருகிற 20-ந் தேதி தொடங்குகிறது.
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் ராமலிங்க பிரதிஷ்டை திருவிழா வருகிற 20-ந் தேதி தொடங்குகிறது. இது குறித்து கோவில் இணை ஆணையர் மங்கையற்கரசி கூறியதாவது:-
3 நாட்கள் நடைபெறும் பிரதிஷ்டை திருவிழாவின் முதல் நாள் விழா 20-ந் தேதி தொடங்கிறது. மாலை 6 மணிக்கு ராமேசுவரம திட்டக்குடி பகுதியில் 10 தலையுடன் கூடிய ராவணனின் தலையை ராமபிரான் சம்ஹாரம் செய்யும் நிகழச்சி நடைபெறும்.
2-ம் நாள் நிகழ்ச்சியாக 21-ந் தேதி தனுஷ்கோடி செல்லும் பகுதியில் அமைந்துள்ள கோதண்டராமர் கோவிலில் பகல் 1 மணிக்கு இலங்கை மன்னரான ராவ ணனின் தம்பி விபிஷ்ணருக்கு ராமபிரான் பட்டாபிஷேகம் செய்யும் நிகழச்சி நடைபெற உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கடைசி நாளான 22-ந் தேதி கோவிலில் அமைந்துள்ள காசிவிசுவநாதர் சன்னதியில் இருந்து மூத்த குருக்கள் வெண்கலத்தால் அமைக்கப்பட்ட சிவலிங்கத்தை சுமந்த படி கோவிலின் முதல் பிரகாரத்தை மூன்று முறை வலம் வந்து சுவாமி கருவறையில் சிவலிங்கத்தை வைத்து பிரதிஷ்டை செய்வார். சிறப்பு பூஜைகளுடன் ராமலிங்கப்பிரதிஷ்டை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவிக் கோட்ட பொறியாளர் மயில்வாகணன், கண்காணிப்பாளர்கள் ககாரீன்ராஜ், பாலசுப்பிரமணியன், இணை ஆணையரின் நேர்முக உதவியாளர் கமலநாதன் ஆகியோர் செய்து வருகிறார்கள்.