செய்திகள்
இன்று ஆடி அமாவாசை: பவானி கூடுதுறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்த பக்தர்கள்
இன்று ஆடி அமாவாசையையொட்டி அதிகாலை 5 மணியில் பக்தர்கள் பவானி கூடுதுறையில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
ஆடி அமாவாசை மிகவும் விஷேசமான நாள் ஆகும். இதை புனித நாளாக கருதும் மக்கள் இறந்த தங்களது முன்னோர்களை வேண்டி வணங்கி தர்ப்பணம் செய்வார்கள்.
புனித நதிகளின் ஓரம் தங்கள் முன்னோர்களை வணங்கி அவர்களுக்கு பிடித்தமான உணவும் பொருட்களும் படைத்து வழிபடுவார்கள். இப்படி வழிபடுவதன் மூலம் முன்னோர்களின் அருள் கிடைத்து வாழ்வில் எந்தவித தொந்தரவும் ஏற்படாமல் வாழ்க்கை சிறக்கும் என்பது ஐதிகம்.
ஈரோடு மாவட்டம் ஈரோடு அருகே உள்ள பவானி கூடுதுறை மிகவும் விஷேசமான வழிபாட்டு தலம் ஆகும். காவிரி, பவானி, அமுத நதி ஆகிய 3 நதிகள் சங்கமிக்கும் இடமாகவும் சங்கமேஸ்வரன் கோவில் அமைந்த புண்ணிய தலமாகவும் இது உள்ளது.
பவானி கூடுதுறையில் ஆடி அமாவாசையன்று முன்னோர்களுக்கு திதி கொடுக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள். அதே போல் இன்று ஆடி அமாவாசையையொட்டி அதிகாலை 5 மணியில் இருந்தே உள்ளூர் மற்றும் ஈரோடு மாவட்டம் முழுவதிலிருந்தும் பக்தர்கள் குவிந்தனர்.
பக்கத்து மாவட்டங் களான திருப்பூர், கோவை, சேலம், நாமக்கல், கரூர் மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பவானி கூடுதுறையில் குடும்பம், குடும்பமாக வந்து குவிந்தனர்.
இவர்கள் பவானி கூடுதுறையில் இறங்கி புனித நீராடி புதிய துண்டு அணிந்து தங்களது பெற்றோர் மற்றும் முன்னோர்களை வேண்டி அவர்களுக்கு பிடித்த உணவு வகைகளை படைத்து பிண்டம் வைத்து மனமுருகி வழிபட்டனர். பிறகு பொருட்களை ஆற்றில் கரைத்து நீராடினர்.
கூடுதுறையில் தண்ணீர் மிகவும் குறைவாகவே இருந்தது. இதனால் ஆற்றின் மைய பகுதிக்கு சென்று பக்தர்கள் நீராடினர். மையப்பகுதியில் சேறும்,சகதியும் மேலும்ஆழமும் அதிகம் உள்ளதால் ஆழமான பகுதிக்கு போய் விட வேண்டாம் என பொது மக்களையும், பக்தர்களையும் ஒலி பெருக்கி மூலம் போலீசார் கேட்டுக் கொண்டனர்.
வழக்கம் போல் பவானி கூடுதுறையில் கூட்டம் அதிகமாக இருந்தது. இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ஆற்றின் ஆழமான பகுதிக்கு பக்தர்கள் செல்லக் கூடும் என்பதால் பவானி, அந்தியூர் மற்றும் ஈரோடு தீயணைப்பு வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். போலீசாரும் ரோந்து பணியில் சென்று பாதுகாப்பு பணியை பார்வையிட்டனர்.