செய்திகள்
காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் 9-ந்தேதி கும்பாபிஷேகம்
தற்போது காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் திருக்கோவில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலுக்கு வரும் 9-ந்தேதி கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.
காஞ்சீபுரத்தில் புகழ் பெற்ற காமாட்சிஅம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் ரூ. 35 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீகார்யம் சல்லா விஸ்வநாத சாஸ்திரிகள், செயல் அலுவலர் விஜயன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-
காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் 1841, 1944, 1976 மற்றும் 1995 ஆகிய ஆண்டுகளில் கும்பாபிஷேகங்கள் நடத்தப்பட்டன. 1944 மற்றும் 1976-ல் கும்பாபிஷேகங்களை காஞ்சி சங்கராசாரியார் மகா பெரியவர் நடத்தி வைத்தார்.
தற்போது திருக்கோவில் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தங்க கோபுரம் 70 கிலோ தங்கத்தை கொண்டு 5 அடுக்குகளாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆதிசங்கரர் சன்னதி முழுவதும் கருங்கற்களால் உருவாக்கப்பட்டுள்ளது. ராஜகோபுரம் உள்ளிட்ட திருக்கோவிலில் உள்ள 4 கோபுரங்களிலும் உள்ள கோபுர கலசங்களில் நடு கலசம் தங்க முலாம் பூசப்பட்டுள்ளது. மற்றவை செப்பு கலசங்களாகும். திருப்பணிகள் அனைத்தும் உபயதாரர்களால் செய்து தரப்பட்டுள்ளது.
கும்பாபிஷேகத்திற்கான பூஜைகள் இன்று 9 மணிக்கு கணபதி பூஜையுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து 4, 5, 6, 7, 8 ஆகிய தேதிகளில் வாஸ்து ஹோமம், முதல்கால யாகசாலை பூஜை, கன்யா மற்றும் சுவாசினி பூஜை உள்ளிட்டவைகள் நடத்தப்பட்டு 8-ந் தேதியன்று இரவு பூர்ணாஹீதி மற்றும் தீபாராதணை நடைபெறும்.
9-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 9.10 மணி முதல் 9.45 மணிக்குள் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடை பெறும். தொடர்ந்து மூலஸ்தானத்துக்கு அபிஷேகமும், மகா தீபாரா தனையும் நடைபெறும். அன்று இரவு வெள்ளி ரதத்தில் காமாட்சியம்மன் ராஜவீதியில் உலாவருவார்.
கும்பாபிஷேக நிகழ்ச்சிகளில் ஜம்முகாஷ்மீர் துணை முதல்வர், கர்நாடக மற்றும் அசாம் மாநில அமைச்சர்கள், புதுவை கவர்னர் கிரண்பேடி, புதுவை முதல்-மந்திரி நாராயணசாமி, மதுரை ஆதீனம், வேலூர் நாராயணியம்மாள், பங்காரு அடிகளார் உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள 18 ஆதீனங்கள் கலந்து கொள்கிறார்கள். மேலும் கர்நாடகத்தில் உள்ள அனைத்து மடாதிபதிகளும் கலந்து கொள்கிறார்கள்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.