செய்திகள்
பவானி பழனியாண்டவர் கோவில் தைப்பூச திருவிழா நாளை மறுநாள் கொடியேற்றத்துடன் தொடக்கம்
பவானி பழனியாண்டவர் கோவில் தைப்பூச திருவிழா நாளை மறுநாள் (2-ந்தேதி) காலை 8.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
பவானியில் புகழ்மிக்க பழனியாண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூச தேர்த்திருவிழா சிறப்பாக நடக்கும்.
அதேபோல் இந்தாண்டும் நாளைமறுநாள் (2-ந்தேதி) காலை 8.30 மணிக்கு கொடி ஏற்றத்துடன் தைப்பூச விழா தொடங்குகிறது. மாலை 4 மணிக்கு யாகசாலை பூஜையும் 6 மணிக்கு அபிஷேகமும் நடக்கிறது. இரவு 7 மணிக்கு வெள்ளித்தேரில் சாமி திருவீதி உலா வருகிறது.
இதேபோல் தினமும் காலை, மாலை சிறப்புபூஜை களும் வழிபாடுகளும் நடக்கிறது. வரும் 10-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 5 மணி முதல் 7.30 மணி வரை திருக்கல்யாணமும் மாலை 3 மணிக்கு தேரோட்டமும் நடைபெறுகிறது.
விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கிறார்கள். மறுநாள் (11-ந்தேதி) மாலை 4 மணிக்கு யாகசாலை பூஜையும் இரவு 7.30 மணிக்கு சுவாமி திரு வீதிஉலா, பாரிவேட்டை நிகழ்ச்சியும் நடக்கிறது.