செய்திகள்
வீரமாகாளியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோவில் ஆடிப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப்பெருந்திருவிழா நடைபெற்று வருகிறது. அதன்படி இவ்வாண்டு திருவிழாவை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை பூச்சொரிதல் விழா நடைபெற்றது.
திருவிழா நேற்று இரவு காப்பு கட்டுதல் மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் மண்டகப்படிதாரர்களான வெள்ளாளர் சமுதாயத்தினர் சார்பாக வீரமாகாளியம்மனுக்கு சிறப்பு அபிசேக ஆராதணைகள், அம்பாள் வீதியுலா நடைபெற்றது.இதில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வரும் 27 மற்றும் 28ந் தேதிகளில் நடக்கிறது.