செய்திகள்

ஆட்டம் 49 ஓவராக குறைப்பு: தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக நியூசிலாந்து பந்து வீச்சு

Published On 2019-06-19 10:50 GMT   |   Update On 2019-06-19 10:50 GMT
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக நியூசிலாந்து டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. ஆட்டம் 49 ஓவராக குறைக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து - தென்ஆப்பிரிக்கா அணிகள் மோதும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 25-வது லீக் ஆட்டம் பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டனில் இன்று மதியம் 3 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. ஆனால், பர்மிங்காமில் ஏற்கனவே மழை பெய்ததால், பவுண்டரி லைன் அருகே (Outfield) ஈரப்பதமாக இருந்ததால் டாஸ் சுண்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.



பின்னர் போட்டி இந்திய நேரப்படி 4.30 மணிக்கும் தொடங்கும் என்றும், 4 மணிக்கு டாஸ் சுண்டப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி டாஸ் சுண்டப்பட்டதில் நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். ஒன்றரை மணி நேரம் வீணாகியுள்ளதால் ஆட்டம் 49 ஓவராக குறைக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News