உலகம்

அமெரிக்காவில் கார்களை நோக்கி துப்பாக்கியால் சுட்ட இளம்பெண்

Published On 2023-08-17 13:23 IST   |   Update On 2023-08-17 13:23:00 IST
  • நிலைமையை உணர்ந்த போலீசார் தங்களது காரால் பெண்ணை இடித்து தள்ளினர்.
  • பெண் எதற்காக துப்பாக்கியுடன் சாலையில் சென்றார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அமெரிக்காவில் வடக்கு பெல்மோர் பகுதியில் உள்ள சாலையில் போக்குவரத்து சிக்னல் அருகே ஒரு இளம்பெண் நின்று கொண்டு அங்கு வரும் கார்களை நோக்கி துப்பாக்கியை காட்டி மிரட்டி உள்ளார். திடீரென வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்ட அவர் பின்னர் கார்களை நோக்கி சுட்டதால் காரில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்றனர். துப்பாக்கியை கீழே போடுமாறு ஒரு போலீஸ்காரர் அந்த பெண்ணை நோக்கி சத்தம் போட்டார். அப்போது அந்த பெண் துப்பாக்கியை நீட்டியவாறு சாலையில் ஓடியதோடு தனது தலையை நோக்கி துப்பாக்கியை திருப்பினார்.

நிலைமையை உணர்ந்த போலீசார் தங்களது காரால் அந்த பெண்ணை இடித்து தள்ளினர். இதனால் கீழே விழுந்த அந்த பெண் மீண்டும் துப்பாக்கியை எடுக்க முயன்றார். அதற்குள் மற்ற போலீசார் துப்பாக்கியை பறிமுதல் செய்ததோடு அந்த பெண்ணை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. அந்த பெண் எதற்காக துப்பாக்கியுடன் சாலையில் சென்றார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News