உலகம்
கிரீஸ்: வெடிகுண்டு உடன் சென்ற பெண்- பொதுவெளியில் திடீரென வெடித்ததில் உடல் சிதறி பலி
- காலை நேரத்தில் வங்கி அருகே வெடிகுண்டு உடன் சென்றுள்ளார்.
- கையில் இருக்கும்போதே வெடிகுண்டு வெடித்துள்ளது.
கிரீஸ் நாட்டின் வடக்கு நகரான தெசாலோகினி நகரில் பெண் ஒருவர் வெளிப்படையாக கையில் வெடிகுண்டு எடுத்துச் சென்றபோது திடீரென வெடித்ததில் உடல் சதறி பலியானார்.
இன்று காலை 5 மணிக்கு ஒரு வங்கி அருகில் 38 வயது பெண் ஒருவர் கையில் வெளிப்படையாக வெடிகுண்டு ஒன்றை எடுத்துச் சென்றுள்ளார். அப்போது குண்டு வெடித்ததில் அந்த பெண் உயிரிழந்துள்ளார். இதில் சாலையோரம் இருந்து பல கடைகள் மற்றும் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்கள் சேதம் அடைந்தன.
அந்த பெண் மீது கடந்த காலங்கில் பல கொள்ளை வழக்குகள் இருந்ததாகவும், தற்போது தீவிர இடதுசாரி குழுக்களடன் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.