மரியா கொரினாவுக்கு நோபல் பரிசு: நார்வேயில் உள்ள தனது தூதரகத்தை மூடியது வெனிசுலா
- அமைதிக்கான நோபல் பரிசுக்குக்கு வெனிசுலா நாட்டின் மரியா கொரினா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
- அமைதிக்கான நோபல் பரிசை மரியா டிரம்புக்கு அர்ப்பணித்தார்
உலகின் உயரிய அங்கீகாரமாகக் கருதப்படும் நோபல் பரிசு மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி ஆகியவற்றுக்காக வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் 2025-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி இந்த வருடத்திற்கான அமைதிக்கான நோபல் பரிசுக்குக்கு வெனிசுலா நாட்டின் மரியா கொரினா மச்சாடோ (Maria Corina Machado) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது வெனிசுலா நாட்டு அரசியல்வாதியான இவர் அந்நாட்டின் எதிர்கட்சித் தலைவராக உள்ளார்.
தனக்கு வழங்கிய அமைதிக்கான நோபல் பரிசை ட்ரம்புக்கும் அர்ப்பணிக்கிறேன் என நோபல் பரிசு வென்ற வெனிசுலா எதிர்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ தெரிவித்தார்.
இந்நிலையில், நார்வேயில் உள்ள தூதரகத்தை மூடுவதாக வெனிசுலா அறிவித்துள்ளது. நார்வே அரசின் தன்னாட்சி அமைப்பான நோபல் கமிட்டி வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினாவுக்கு பரிசு அறிவித்ததற்கு அந்நாட்டு அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.