உலகம்

குரங்கு அம்மை

குரங்கு அம்மை பரவல் எதிரொலி - சுகாதார அவசர நிலையை அறிவித்தது அமெரிக்கா

Published On 2022-08-04 19:41 GMT   |   Update On 2022-08-04 19:42 GMT
  • குரங்கு அம்மை பரவலால் அமெரிக்காவின் சில மாகாணங்களில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்நிலையில் அமெரிக்கா முழுவதும் சுகாதார அவசரநிலையை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

வாஷிங்டன்:

ஆப்பிரிக்காவில் முதல் முறையாகக் கண்டறியப்பட்ட குரங்கு அம்மை நோய், தற்போது பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது. குரங்கு அம்மை நோயால் உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குரங்கு அம்மை நோய் அமெரிக்காவில் 6,600-க்கும் அதிகமானோருக்கு பரவியுள்ளது. மேலும், நியூயார்க், இல்லினாய்ஸ், கலிபோர்னியா உள்பட பல மாகாணங்கள் அவசர நிலையை அறிவித்துள்ளன.

இந்நிலையில், குரங்கு அம்மை நோயை சுகாதார அவசர நிலையாக அமெரிக்க அரசு அறிவித்துள்ளது. குரங்கு அம்மை நோயைக் கட்டுப்படுத்தவும், தடுப்பூசி ஆய்வுகளை மேற்கொள்ளவும், உரிய நடவடிக்கைகள் எடுப்பதற்காக அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு உள்ளது.

அவசர நிலை பிரகடனம் காரணமாக மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியில் முழு வீச்சில் சுகாதார ஊழியர்கள் ஈடுபடுவார்கள். அதிகம் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொண்டு வருவதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News