உலகம்

முறைகேடுகளை களைய எச்1பி விசா வழங்கும் முறையை நவீன மயமாக்க அமெரிக்கா திட்டம்

Published On 2023-04-30 11:16 IST   |   Update On 2023-04-30 11:16:00 IST
  • வெளிநாடுகளில் இருக்கும் திறமையான பணியாளர்கள் தங்கள் நாட்டில் வந்து பணிபுரிவதற்காக அமெரிக்காவில் எச்1பி வகை விசா வழங்கப்படுகிறது.
  • எச்1பி வகை விசாவை வழங்கும் முறையை நவீன மயமாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

வாஷிங்டன்:

வெளிநாடுகளில் இருக்கும் திறமையான பணியாளர்கள் தங்கள் நாட்டில் வந்து பணிபுரிவதற்காக அமெரிக்காவில் எச்1பி வகை விசா வழங்கப்படுகிறது. இந்தியா, சீனா போன்ற நாடுகளில் உள்ள திறமை வாய்ந்த பணியாளர்களை  வேலையில் அமர்த்த இந்த விசாவையே அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரிதும் நம்பியுள்ளன. இந்த விசாவை வாங்கிய 6 ஆண்டுகள் கழித்து நிரந்தர குடியுரிமை அல்லது கிரீன் கார்டு பெற முடியும் என்பதால் இதற்கு எப்பொழுதுமே மவுசு அதிகம்.

இந்த நிலையில் எச்1பி விசா வழங்குவதில் சில நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக அரசாங்கத்துக்கு தொடர்ந்து புகார்கள் சென்றது.

எனவே இந்த எச்1பி வகை விசாவை வழங்கும் முறையை நவீன மயமாக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதன்படி இந்த எச்1பி விசாக்கள் 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படும். தேவைப்பட்டால் மேலும் 3 ஆண்டுகளுக்கு இதனை நீட்டிக்கலாம் உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

Tags:    

Similar News