உலகம்
null

இந்திய அரசு, வாக்காளர்களுக்கு அமெரிக்கா பாராட்டு

Published On 2024-06-05 08:00 IST   |   Update On 2024-06-05 08:15:00 IST
  • இந்திய அரசாங்கத்தையும், அங்குள்ள வாக்காளர்களையும் அமெரிக்காவின் சார்பாகப் பாராட்ட விரும்புகிறோம்.
  • மேலும் இறுதி முடிவுகளைக் காண ஆவலுடன் காத்திருக்கிறோம்.

புதுடெல்லி:

பாராளுமன்ற தேர்தலில் தற்போதைய நிலவரப்படி, பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 291-க்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வருகிறது. தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க. 240 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் பிரதமர் மோடி வெற்றி பெற்றார். இவர் 6,12,970 வாக்குகள் பெற்றார். 3-வது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க மக்கள் வாய்ப்பு கொடுத்துள்ளனர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்திய அரசாங்கத்தையும் வாக்காளர்களையும் அமெரிக்காவின் சார்பாகப் பாராட்ட விரும்புகிறோம் என வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறினார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

இதுபோன்ற ஒரு மாபெரும் தேர்தல் பணியை வெற்றிகரமாக முடித்து அதில் பங்கேற்றதற்காக இந்திய அரசாங்கத்தையும், அங்குள்ள வாக்காளர்களையும் அமெரிக்காவின் சார்பாகப் பாராட்ட விரும்புகிறோம். மேலும் இறுதி முடிவுகளைக் காண ஆவலுடன் காத்திருக்கிறோம்.

இவ்வாறு மேத்யூ மில்லர் கூறினார். 

Tags:    

Similar News