உலகம்

ஜெலன்ஸ்கி   புதின் 

படைகளை திரும்பப் பெறாமல் ரஷியாவுடன் அமைதி பேச்சுவார்த்தை கிடையாது- உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

Published On 2022-08-18 22:43 GMT   |   Update On 2022-08-18 22:43 GMT
  • உக்ரைன்-ரஷியா போரை முடிவுக்கு கொண்டு வர துருக்கி அதிபர் தீவிர முயற்சி.
  • உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் ஐ.நா.பொதுச்செயலாளர் பேச்சுவார்த்தை.

உக்ரைன்-ரஷியா போரை முடிவுக்கு கொண்டு வர துருக்கி நாட்டின் அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். போர் தொடங்கிய பின்னர் முதன்முறையாக அவர் உக்ரைன் சென்றுள்ளார். அவருடன் ஐ.நா.பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெசும், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை நேற்று சந்தித்து விரிவான ஆலோசனை நடத்தினர்.

போர்க் கைதிகளின் பரிமாற்றத்தை விரிவுபடுத்துவது பற்றியும், உக்ரைன் அணுமின் நிலையங்கள் பாதுகாப்பிற்கு, ஐ.நா.வின் அணுசக்தி நிபுணர்களை ஏற்பாடு செய்வது உள்ளிட்டவை குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.

இந்த விவகாரத்தில் துருக்கி மத்தியஸ்தராக செயல்பட தயாராக இருப்பதாக எர்டோகன் மீண்டும் தெரிவித்தார். ரஷிய அதிபர் புதினுடன் தொடர்பில் இருப்பதாகவும், பேச்சுவார்த்தை மேசையில் போர் முடிவடையும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பேச்சுவார்த்தையில் சிறிது முன்னேற்றம் காணப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கிடையில், உக்ரைனின் கார்கிவ் பகுதியில் ரஷிய படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதல்களில் குறைந்தது 17 பேர் நேற்ற ஒரே இரவில் கொல்லப்பட்டதாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் படைகளை திரும்பப் பெறாமல் ரஷியாவுடன் எந்த அமைதிப் பேச்சுவார்த்தையும் உக்ரைன் நடத்தாது என அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Tags:    

Similar News