உலகம்

ரஷிய போர்க்கப்பலை அழித்த உக்ரைன் விமானப்படை

Published On 2023-12-26 15:25 IST   |   Update On 2023-12-26 15:25:00 IST
  • ரஷிய போர்க்கப்பல் மீது உக்ரைன் விமானப்படை தாக்குதல் நடத்தியது.
  • இந்த தாக்குதலில் ரஷிய போர்க்கப்பல் அழிந்தது என உக்ரைன் தெரிவித்துள்ளது.

கீவ்:

உக்ரைன் மீது கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷியா தனது ராணுவ படைகளை அனுப்பி தாக்குதலை தொடங்கியது. இந்தப் போரில் உக்ரைன் ராணுவத்திற்கு இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ராணுவ உதவிகளை செய்து வருகின்றன.

மேலும் ரஷியாவிடம் போரில் இழந்த சில பகுதிகளை உக்ரைன் ராணுவம் மீட்டுள்ளது.

இந்நிலையில், ரஷ்யாவின் போர்க் கப்பலை அழித்துள்ளதாக உக்ரைன் விமானப்படை தளபதி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, உக்ரைனின் விமானப்படைத் தளபதி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், டிசம்பர் 26 அன்று உள்ளூர் நேரப்படி அதிகாலை 03.47 மணிக்கு உக்ரைனிய விமானிகள் ரஷிய கடற்படையின் நோவோசெர்காஸ்க் என்ற பெரிய போர்க் கப்பலை அழித்தனர். ரஷியாவின் கடற்படை சிறியதாகி வருகிறது. விமானப்படை விமானிகளுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News