உலகம்

துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 22 பேர் படுகாயம்

Published On 2025-10-28 11:01 IST   |   Update On 2025-10-28 11:01:00 IST
  • நிலநடுக்கத்தால் அப்பகுதியில் 3 கட்டிடங்கள் பயங்கர சேதம் அடைந்தன.
  • உயிரிழப்பு உள்ளிட்ட பாதிப்பு பற்றிய தகவல்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.

துருக்கியின் மேற்குப் பகுதியான பாலிகெசிர் மாகாணம் சிந்திர்கி நகரில் நள்ளிரவு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவானதாக தேசிய நில நடுக்கவியல் மையம் தெரிவித்தது. நிலநடுக்கத்தால் சிந்திர்கியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கியது.

நள்ளிரவில் திடீரென கட்டிடங்கள் குலுங்கியதால் தூக்கத்திலிருந்து பதறி அடித்து எழுந்து வெளியே ஓடி வந்த மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

அந்த நேரத்தில் மழை பெய்ததால், மசூதிகள், பள்ளிகள் மற்றும் விளையாட்டு அரங்குகளில் வீடு திரும்ப விரும்பாதவர்கள் தங்க வைக்கப்பட்டனர்.

நிலநடுக்கத்தால் அப்பகுதியில் 3 கட்டிடங்கள் பயங்கர சேதம் அடைந்தன. 22 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் உயிரிழப்பு உள்ளிட்ட பாதிப்பு பற்றிய தகவல்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை. இஸ்தான் புல் நகரம், புர்சா, மணிசா மற்றும் இஜ்மீர் உள்ளிட்ட மாகாணங்களிலும் இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News