உலகம்

வெனிசுலா இடைக்கால அரசுடன் அமெரிக்காவுக்கு சுமூக உறவு- டிரம்ப்

Published On 2026-01-17 12:43 IST   |   Update On 2026-01-17 12:43:00 IST
  • அமெரிக்கா-வெனிசுலா இடையேயான உறவுகள் மேம்பட்டு வருகிறது.
  • நாட்டை நடத்தி வரும் பலருடன் பேசி வருகிறோம்.

வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதை பொருள் கடத்துவதற்கு உடந்தையாக இருந்ததாக கூறி வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ, அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோரை அமெரிக்க ராணுவம் வெனிசுலாவுக்குள் நுழைந்து கைது செய்து அமெரிக்காவுக்கு கொண்டு சென்றது.

இதையடுத்து வெனிசுலாவின் இடைக்கால அதிபராக துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் நியமனம் செய்யப்பட்டார். இதற்கிடையே வெனிசுலாவின் எண்ணெய் வளங்களை அமெரிக்கா நிர்வகித்து விற்பனை செய்யும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.

வெனிசுலாவின் எண்ணெய் துறையை அமெரிக்காவுக்கு திறக்க இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் முடிவு செய்துள்ளார். இந்த நிலையில் வெனிசுலா இடைக்கால அரசாங்கத்துடன் அமெரிக்காவுக்கு சுமூக உறவு ஏற்பட்டுள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில்,

அமெரிக்காவிற்கு 5.2 பில்லியன் டாலர் மதிப்பு உள்ள (ரூ.47ஆயிரத்து 186 கோடி) 5 கோடி பேரல்கள் எண்ணெய்யை வழங்க வெனிசுலா முன்வந்து உள்ளது. அந்த ஒப்பந்தத்திற்கு நான் ஒப்பு கொண்டு உள்ளேன். இதன்மூலம் அமெரிக்கா-வெனிசுலா இடையேயான உறவுகள் மேம்பட்டு வருகிறது. நாங்கள் வெனிசுலாவின் புதிய அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். நாட்டை நடத்தி வரும் பலருடன் பேசி வருகிறோம். அவர்கள் எங்களிடம் 5 கோடி பேரல் எண்ணெய் உள்ளது. அதை உடனடியாகச் சுத்திகரிக்க வேண்டும். ஏனென்றால் எங்களிடம் சேமித்து வைக்க இடமில்லை. நீங்கள் அதை எடுத்துக்கொள்வீர்களா? என்று கேட்டார்கள். அதற்கு நான் அதை எடுத்துக்கொள்வோம் என்று கூறினேன். அதற்கு நான் யாரிடமும் ஆலோசனை கேட்க வேண்டியதில்லை. தற்போது வெனிசுலா இடைக்கால அதிபருடனும் மற்ற அனைவருடனும் எங்களுக்கு ஒரு சிறந்த உறவு உள்ளது.

இதனால் இரு நாடுகள் இடையே பெரும் அழுத்தம் தணிந்துள்ளது.

இப்போது எனக்கு வெனிசுலாவை மிகவும் பிடிக்கும். அது ஒரு அற்புதமான நாடு என்று நினைக்கிறேன். அந்த நாடு ஒரே வாரத்தில் வியக்கத்தக்க வகையில் மாறிவிட்டது என்றார். 

Tags:    

Similar News