உலகம்

அமெரிக்காவில் சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை

Published On 2023-04-28 12:55 IST   |   Update On 2023-04-28 12:55:00 IST
  • சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி, அதில் பதிவுகளை வெளியிடும் சிறுவர்கள் மனநல பாதிப்புகளுக்குள்ளாவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
  • சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் பதிவுகளை பார்வையிட மட்டும் சிறுவர்களை அனுமதிக்கலாம்.

வாஷிங்டன்:

பேஸ்புக், இன்ஸ்டாகி ராம், டிக்-டாக் போன்ற சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி, அதில் பதிவுகளை வெளியிடும் சிறுவர்கள் மனநல பாதிப்புகளுக்குள்ளாவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்தச் சூழலில், 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் இது போன்ற சமூக ஊடகங்களில் கணக்குகளை உருவாக்கி தங்களது படைப்புகளை பதிவு செய்வதற்கு தடை விதிப்பதற்கான சட்ட மசோதாவை அமெரிக்க நாடாளுன்றத்தில் அனைத்து கட்சி எம்.பி.க்கள் தாக்கல் செய்தனர் . சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் பதிவுகளை பார்வையிட மட்டும் சிறுவர்களை அனுமதிக்கலாம் என்று அந்த வரைவு மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News