உலகம்

காரில் சீட் பெல்ட் அணியாததால் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்குக்கு அபராதம்- போலீசார் நடவடிக்கை

Published On 2023-01-21 15:15 IST   |   Update On 2023-01-21 15:15:00 IST
  • நாட்டின் பிரதமரே காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியது.
  • காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்றதாக ரிஷி சுனக்குக்கு போலீசார் அபராதம் விதித்துள்ளனர்.

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், புதிய திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் சமூக ஊடகங்களில் விளம்பரப்படுத்த காரில் பயணித்தபடி வீடியோ மூலம் பேசினார். அப்போது அவர் காரில் சீட் பெல்ட் அணியாமல் பயணிக்கும் காட்சிகள் இடம்பெற்று இருந்தன.

நாட்டின் பிரதமரே காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக ரஷி சுனக் மன்னிப்பு கேட்டார்.

இந்த நிலையில் காரில் சீட் பெல்ட் அணியாமல் சென்றதாக ரிஷி சுனக்குக்கு போலீசார் அபராதம் விதித்துள்ளனர். அவருக்கு 100 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக போலீசார் டுவிட்டரில் கூறும்போது, ஓடும் காரில் பயணிக்கும்போது சீட் பெல்ட் அணிய தவறியதை காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதை தொடர்ந்து, ரிஷி சுனக்குக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News